Wednesday, June 16, 2010

காவியக் காதல்

நினைவுகள் முதலாகி
கனவுகள் செலவாகி
கவலைகள் வரவாகி
கண்ணீரில் முடிவாகி
கவிகளில் கருவாகி
காவியத்தில் உருவாகி
நெஞ்சங்களில் இடம்மாறி
நேசத்தின் பொருளாகி
தேசத்தின் புகழ் காக்கும்
காலத்தை வென்ற
காவியக் காதல்

உன் கடிதங்கள்

இதோ
எத்தனை
மழை இங்கு பொழிகிறது,
இரத்த மழை………
கண்ணீர் மழை……
பூவே
உன் கடிதம்
என் கைகளை ஸ்பரிசித்தபோது
இங்கு
வான் மழையல்லவா
பொழிந்தது!
ஓ……
தபால் கவருக்குள்
கடிதத்தோடு
மேகங்களையும்
வைத்து அனுப்பிவிட்டாயோ!

அழகு

பொன்னிலும்
பொருளிலும்
போலிப்பாங்கான
பேச்சிலும்
தெரிவதல்ல அழகு
மென்மையான உள்ளத்தின்
உண்மையான முறுவலில்
தெரிவதே
தெய்வீக அழகு!

சுகமான சோகங்கள்

சோகங்களை
சுமப்பதிலும்
சுகம் தான்!
இன்பங்கள் என்னோடு
இணைந்தாலும்
இரு கண்கள் வேண்டும்!
காலமெல்லாம்
கண்களில் நீர் வேண்டும்!
உறவே
உன்
தோள்களில் சாய்ந்து
சுகமாக அழ வேண்டும்!

தோல்வி

நிழலாக தொடராதே
நிஜமாக மலராதே
நினைவில் – நீ
நிலைக்காதே
மலரெனத் தழுவாதே
வெற்றியின் வாடை
எப்போதும்
என் பக்கமே!

Sunday, June 6, 2010

அன்பு

உண்மை குடியிருக்கும்
உள்ளத்தில்
தெய்வீகம் தவளும்
தெளிந்த நெஞ்சத்தில்
இயற்கையை இரசிக்கும்
இனிய இதயத்தில்
தன்னையே தாரைவார்க்கும்
தாயின் சுவாத்தில்
நடமாடும் நூலகமாய்
நாளும் நிலைத்திருக்கும்…!

புதுவரவொன்று…..

நீயோ…..
பட்டுக் கம்பளமிட்டு
வசந்த காலத்தை வழி மறித்து வைத்து
வைகறை மலர்களை பறித்து வைத்து
புது வரவை எதிர்பார்த்த வண்ணமாய்….
பட்டுக்கம்பளத்தை அடைவதற்காய்
என் பாதங்கள்கத்திமீதல்லவா
பயணிக்கின்றன

” மனிதம்” எங்கே

சோகங்கள் தாங்கி வரும்
மேகங்கள் தரும்
சேதி தான் என்ன?
மானிடனே
உன்
மௌனத்தின்
முடிவு தான் என்ன?
விடிலுக்காய் காத்திருந்து
வெள்ளிகளை எண்ணுவதில்
வெற்றி சாத்தியமோ….?
உன் மனவீணை
தடுமாறும்
நிலை மாற வேண்டும்
புயல் கூட உனக்காக
தணிந்தாக வேண்டும்
மானிடனே
உறவுகளைத் தொலைத்து
உடமைகளை இழந்து – நீ
எதைத் தான் தேடுகிறாய்?

மனிதம் தொலைந்து விட்டதாக
தேடுகின்றாயா?
அதோ
கிழக்குப் பறவையொன்று
கீழ் வானில் பறக்கிறது
வெண்புறாவே தான்!
நீ
விடியலின் போது
விசாரித்துப் பார்
”மனிதம்” எங்கே? என்று

தானம்

என் குடும்பம் என்னை
தாரவாத்து கொடுத்தார்கள்
என் கணவனுக்காக.நண்பனே!
நான் உன் மீது கொண்ட நட்பை
தாரவாத்து கொடுக்கிறேன்
உன் மனைவிக்காக

காலம்

மனிதர்களை தான் விதி
விடவில்லை
என்றால்உங்களை கூடவா……?

இந்த வயதில் கூட தன் காதல் மனைவிக்காக….

அன்பே
உன்னை கைப்பிடித்த சிறுவயது முதல்
என் உயிர் இருக்கும் வரை
உனைக் காப்பேன்
எந்த இடையூறு வந்தாலும்

உன் காதலினாலோ.....!

அன்பே
உன்னை காதலித்ததாலோ
என்னமோ
உன் பாதி ஒளியாகவும்
என் பாதி இருளாகவும்....

தொலைவினிலே……

அன்பே
வாழ்வின் அர்த்தத்தை
தேடிச் சென்ற வழியில்
என் இதயத்தையல்லவா
தொலைத்து விட்டேன்
தொலைந்த இடம்
கண்டு கொண்டேன்
தொலைவினிலே உன்னிடமே
உயிரே – நான் உன் வசமே!

Saturday, June 5, 2010

இலக்கிய உலகத்தில்
இனிமையானது
இசை உலகத்தில்
வசமானது
கலை உலகத்தில்
காவியமானது
உணர்ந்தவர் வாழ்வில்
உன்னதமானது
இருபதின்
கம்பியூட்டர் யுகத்தில்
மலிவானது!

அழகிய காரணம் ஒன்று

நீ
அர்ச்சனை செய்து
அனுப்பிய விபூதியை – நான்
அணிவதே இல்லையடி!
காரணம் – அது
முடிந்து விடும் என்ற
முன்னெச்சரிக்கை தான்!

தீ

பெண்ணே
தலைவன் பெயர் சொல்லாது – நீ
தடுமாறியது சங்க காலமடி
தலைமை வகித்து
தரணியை நீ ஆள்வது
இந்தக் காலமடி
நீ
வார்த்தைகளின்
வர்ணிப்புகளுக்காக
சிருஷ்டிக்கப்பட்டவள் அல்ல
இராமனின் சீதையாய் தீக்குளிக்க
இன்றைய சீதைகள்
சிறகிழந்த சிட்டுக்கள் அல்ல…..!

என் சுவாசமே

என் சுவாசமே – நீ
தோற்றுவிட்டாய் என்பதை
நான்
ஏற்றுவிடப் போவதில்லை
ஏற்கனவே
என் இதயத்தை வென்றவன்
நீ தானே…… நீ தானே!

மௌனம்


உலகத்தில் – மிக
உயர்ந்து நிற்கும்
உன்னத பாஷை!